< Back
மாநில செய்திகள்
மதுக்கடையில் விற்பனையாளர் மீது தாக்குதல்
திருவாரூர்
மாநில செய்திகள்

மதுக்கடையில் விற்பனையாளர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
26 Oct 2023 12:45 AM IST

நீடாமங்கலம் அருகே மதுக்கடையில் விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே உள்ள காளாஞ்சிமேடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மதுக்கடை உள்ளது. செருமங்கலம் பாமணியை சேர்ந்த முருகானந்தம் (வயது44) இந்த கடையின் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மதுக்கடையில் சிறுவன் ஒருவன் பணத்தை கொடுத்து மதுபாட்டில் கேட்டபோது முருகானந்தம் மது கொடுக்க மறுத்து விட்டார். இதனால் சிறுவனை மதுபானம் வாங்க அனுப்பிய ராயபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த காளை என்கிற பிரவீன்ராஜ்(30) ராமராஜன்(27), மேலக்கடம்பூர் அருண் ஆகிய 3 பேரும் முருகானந்தத்தை திட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.இதை அங்கிருந்த செருமங்கலம் இளங்கோவன்(30), வடக்கு உடையார்மான்யம் தமிழ்ச்செல்வன்(23) ஆகியோர் தட்டிக்கேட்டனர். அப்போது இளங்கோவன், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தாக்கப்பட்டனர்.இது குறித்து முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும்காளை என்கிற பிரவீன்ராஜ், ராமராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அருனை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்