< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல்
|19 Oct 2023 12:00 AM IST
ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், பெண்ணக்கோணத்தில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரிந்து வருபவர் சவுந்தர பாண்டியன் (வயது 40), மாற்றுத்திறனாளி. இவர் நேற்று வழக்கம்போல் பணி முடிந்து தனது வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் சவுந்தர பாண்டியனை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.