< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
ரெயில்வே இளநிலை பொறியாளர் மீது தாக்குதல்
|20 Oct 2023 11:35 PM IST
அரக்கோணத்தில் ரெயில்வே இளநிலை பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை பலீசார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம் - மும்பை ரெயில் மார்க்கத்தில் அரக்கோணத்தில் இருந்து கைனூர் கிரமாம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை பணியை ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான பிரிவு இளநிலை பொறியாளர் சதீஷ்குமார் (வயது 41) பார்வையிட வந்தார். அப்போது அவர் மீது இரு வாலிபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பொறியாளர் சதீஷ்குமாருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.