< Back
மாநில செய்திகள்
மது குடிக்க பணம் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்
சேலம்
மாநில செய்திகள்

மது குடிக்க பணம் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
26 Oct 2023 1:06 AM IST

மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

சேலம் சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 33). இவர், அந்த பகுதியில் தனது மனைவியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த தர்மன் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி அருள்குமார் என்பவர், சுதாகரிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அருள்குமார், தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் சுதாகரின் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்