தஞ்சாவூர்
மதுகுடிக்க பணம் தராத தாய் மீது தாக்குதல்; 2 ஸ்கூட்டர்களுக்கு தீவைப்பு
|மதுகுடிக்க பணம் தராத தாய் மீது தாக்குதல்; 2 ஸ்கூட்டர்களுக்கு தீவைப்பு
பட்டுக்கோட்டை அருகே மது குடிக்க பணம் தராத தாயை வழிமறித்து தாக்கி 2 ஸ்கூட்டர்களுக்கு தீவைத்து எரித்த தொழிலாளிைய போலீசார் கைது செய்தனர்.
மதுகுடிக்க பணம் கொடுக்க மறுப்பு
பட்டுக்கோட்டையை அடுத்த சாந்தாங்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மனைவி செல்வராணி (வயது 40). இவர்களது மகன் டேனியல் (22). கட்டிட தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று செல்வராணி சாந்தாங்காடு ஆற்றுக்கரை பகுதியில் ஸ்கூட்டரில் வந்த போது, டேனியல் தனது தாயை வழிமறித்து குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேனியல் அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து செல்வராணியின் ஸ்கூட்டரை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.
2 ஸ்கூட்டர்களுக்கு தீவைப்பு
இதனை தடுக்க வந்த மற்்றொருவரின் ஸ்கூட்டர் மற்றும் செல்வராணியின் ஸ்கூட்டர் ஆகியவற்றின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் 2 ஸ்கூட்டர்களும் எரிந்து சாம்பலாகின. மேலும் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து தனது தாயை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த செல்வராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தொழிலாளி கைது
இதுகுறித்து செல்வராணி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுகுடிக்க பணம் தராததால் தாயை வழிமறித்து 2 ஸ்கூட்டர்களை ெதாழிலாளி தீவைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.