< Back
மாநில செய்திகள்
தாய், மகன் மீது தாக்குதல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தாய், மகன் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
27 Sept 2023 3:00 AM IST

நிலக்கோட்டை அருகே தாய்-மகன் மீது தாக்குதல் நடத்திய இறைச்சி வியாபாரி கைது செய்யப்பட்டார்.

நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். அவருடைய மனைவி விஜயா (வயது 43). அதே ஊரை சேர்ந்தவர் சேதுபதி (27). இவர், அப்பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், விஜயாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் விஜயா வீட்டுக்கு சேதுபதி சென்றார்.

பின்னர் அவர், திடீரென விஜயாவை இரும்பு கம்பியால் தாக்கினார். இதனை தடுத்த விஜயாவின் மகன் பிரேம்குமாருக்கும் அடி விழுந்தது. இதில் காயம் அடைந்த விஜயாவுக்கும், பிரேம்குமாருக்கும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் விஜயா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து சேதுபதியை கைது செய்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்