< Back
மாநில செய்திகள்
காவலாளி மீது தாக்குதல்; வடமாநில வாலிபர்கள் 8 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காவலாளி மீது தாக்குதல்; வடமாநில வாலிபர்கள் 8 பேர் கைது

தினத்தந்தி
|
27 Oct 2023 2:38 AM IST

நெல்லை அருகே காவலாளி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பலர் அங்கு தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். சம்பவத்தன்று இரவு வடமாநில வாலிபர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காவலாளியான பாளையங்கோட்டை திருத்து பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 23) என்பவர் மோதலை தடுக்க முயன்றார். அப்போது வடமாநில வாலிபர்கள் சிலர் காவலாளி பாலகிருஷ்ணனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜகுமார் (25), ராகுல், பிரதாப்சிங் (24) உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்