< Back
மாநில செய்திகள்
சொத்து தகராறில் விவசாயி மீது தாக்குதல்; வாலிபர் கைது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சொத்து தகராறில் விவசாயி மீது தாக்குதல்; வாலிபர் கைது

தினத்தந்தி
|
14 Aug 2022 12:28 AM IST

சொத்து தகராறில் விவசாயி மீது தாக்குதல் நடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூரை அடுத்த செல்லியம்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 50). விவசாயி. இவரது தம்பி பாபு. இவர்களது குடும்பத்தினருக்கு இடையே சொத்து தகராறும், முன்விரோதமும் இருந்து வந்தது. இந்நிலையில் ராஜேந்திரன், தான் வாங்கிய கடனை திருப்பி தருவதற்காக தனக்குரிய நிலத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் சிறுவாச்சூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பியபோது பாபுவின் மகன் ராஜா வழிமறித்துள்ளார். இதில் ராஜேந்திரனுக்கும், ராஜாவிற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராஜேந்திரனை ராஜா, அவரது தம்பி வெங்கடேசன் மற்றும் பாபு, அவரது மனைவி ராணி ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ராஜேந்திரனுக்கு பற்கள் உடைந்தன. இதையடுத்து ராஜேந்திரன் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜா, வெங்கடேசன் உள்பட 4 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து, வெங்கடேசனை (25) கைது செய்தனர். ராஜா உள்பட மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்