< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
தனியார் பால் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
|25 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே தனியார் பால் நிறுவன ஊழியரை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே வயலாமூரை சேர்ந்தவர் அய்யனார் (வயது 21). தனியார் பால் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வாகனத்தில் பால் எற்றிக்கொண்டு விழுப்புரம் அருகே வேலியம்பாக்கத்தில் அய்யனார் வந்தபோது, அவரை 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அய்யனார் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 10 பேர் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.