< Back
மாநில செய்திகள்
தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
15 March 2023 1:00 AM IST

ஓசூர்:-

ஓசூர் பாஸ்கர்தாஸ் நகரை சேர்ந்தவர் கோபி (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். இவர் அந்த பகுதியில் நின்ற போது அதே பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (27), மாது (26), நடராஜ் (27) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்ததாக தெரிகிறது. இதனை கோபி தட்டிக்கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபியை 3 பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபிரசாத், மாது, நடராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்