விருதுநகர்
நகரசபை துணைத்தலைவர் மீது தாக்குதல்
|ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை துணைத்தலைவரை தாக்கிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை துணைத்தலைவரை தாக்கிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகரசபை துணைத்தலைவர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி தெருவை சேர்ந்தவர் செல்வமணி. தி.மு.க.வை சேர்ந்த இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை துணைத்தலைவராக உள்ளார்.
இந்தநிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 தெருக்களில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஊரணிபட்டி தெரு அருகே செல்வமணி நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்பாது அவரை சிலர் தாக்கினர். இதில் செல்வமணி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
காரணம் என்ன?
இந்த சம்பவம் குறித்து செல்வமணி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அவரை தாக்கிய மர்மநபர்கள் யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, தேடிவருகின்றனர். இதுகுறித்து தகவல்அறிந்த நகரசபை தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை சந்தித்தார்.