கடலூர்
ரூ.40 லட்சத்தை திருப்பி கேட்டதால் மகள், மருமகன் மீது தாக்குதல்
|கடலூர் அருகே ரூ.40 லட்சத்தை திருப்பி கேட்டதால் மகள், மருமகனை தாக்கிய தந்தை, 2 சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தகராறு
கடலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண். தனது தந்தைக்கு ரூ.40 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து அந்த பெண், தனது தந்தையிடம் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் பணத்தை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் அந்த பெண்ணின் மகளை, பள்ளிக்கூடத்திற்கு சென்று தந்தை மற்றும் 2 சகோதரர்கள் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
கத்தியை காட்டி மிரட்டல்
இதுபற்றி அறிந்த அந்த பெண் தனது கணவருடன் தந்தையின் வீட்டிற்கு சென்று ஏன் எனது மகளை கடத்தி வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள், பெண்ணையும் அவரது கணவரையும் தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணை அவர்கள் மானபங்கப்படுத்தியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் கடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெண்ணின் தந்தை மற்றும் 2 சகோதரர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.