< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது

தினத்தந்தி
|
9 July 2022 10:28 PM IST

தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேசமணிநகரை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் மாரித்தங்கம் (வயது 19). இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு வந்த முத்தையாபுரம் குமாரசாமி நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் பிரகாஷ் (20) ஆகிய 2 பேரும் உன்னிடம் பேச வேண்டும் என்று கூறி வெளியே அழைத்துள்ளனர். அப்போது மாரித்தங்கம் தான் வெளியே செல்ல போவதாகவும், தற்போது வர முடியாது என்றும் கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், பாஸ்கர் ஆகிய இருவரும் மாரித்தங்கத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாரித்தங்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின் பெயரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் விசாரணை நடத்தி, பிரகாசை கைது செய்தார். பாஸ்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்