< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
விருதுநகர்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
5 July 2023 12:41 AM IST

கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தினர்

சிவகாசி காரனேசன் காலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் பரணிகுமார் (வயது 20). கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் காளிமுத்துநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகாமூர்த்தி என்பவருக்கும் பரணிகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மகாமூர்த்தியும், அவரது ஆதரவாளரும் கல்லூரி மாணவன் பரணி குமாரை கடுமையாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரணிகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்