< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவி மீது தாக்குதல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவி மீது தாக்குதல்

தினத்தந்தி
|
22 Sept 2022 12:30 AM IST

கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடந்தது.

வடமதுரை அருகே உள்ள மோர்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 47). இவருடைய தங்கை மாரியம்மாளின் மகள் காளீஸ்வரி (20). இவர், பழனியம்மாளின் வீட்டில் தங்கியிருந்து திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று பழனியம்மாளின் வீடு முன்பு இருந்த வைக்கோல் படப்பில் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து ஆத்திரமடைந்த காளீஸ்வரி அதே பகுதியில் உள்ள அஜித் என்பவரின் வீட்டருகே நின்று வைக்கோல் படப்பில் தீ வைத்தவர்களை திட்டிதீர்த்துள்ளார்.

அப்போது அஜித் தன்னைத்தான் காளீஸ்வரி திட்டுகிறார் என நினைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதுடன் காளீஸ்வரியை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். இதில் காயமடைந்த காளீஸ்வரியை அவருடைய குடும்பத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அஜித் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்