< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
12-ம் வகுப்பு மாணவி மாற்றுச்சான்றிதழில் 2-வது மொழியாக இடம் பெற்ற 'அசாமி' - அதிகாரிகள் விளக்கம்
|13 Aug 2022 6:36 AM IST
மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி ஒருவரின் மாற்றுச்சான்றிதழில் 2-வது மொழி அசாமி என குறிப்பிடப்பட்டு இருந்தது.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மேலூர் பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி ஒருவர் கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு அவரது சான்றிதழ்களை சமர்ப்பித்தார்.
அப்போது பிளஸ்-2 தேர்ச்சிக்கான அவரது மாற்றுச்சான்றிதழில் முதல் மொழி தமிழ் என்றும், 2-வது மொழி அசாமி எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை அறிந்த அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
அந்த மாணவி படித்த பள்ளியில் கணினியில் பதிவு செய்யும்போது இது சரியாக காட்டுகிறது. ஆனால் மாற்றுச்சான்றிதழில் தொழில் நுட்ப பிழையால் 'அசாமி' என தவறாக அச்சாகி இருப்பதாகவும், அந்த பிழையை உடனடியாக திருத்தம் செய்து விட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.