ஈரோடு
நசியனூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
|நசியனூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினா்.
பவானி
நசியனூர் அருகே உள்ள காரமடை பகுதியில் பிளசிங் அவென்யூ என்ற பகுதியில் 245 வீட்டு மனைகள் விற்பனைக்காக ஒதுக்கப்பட்டன. இந்த பகுதியில் உள்ள அனைத்து வீட்டு மனைகளும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் அங்கு வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் நசியனூர் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர், சாலை, சாக்கடை என எந்த அடிப்படை வசதிகளையும் பிளசி்ங் அவென்யூ பகுதிக்கு செய்து கொடுக்கவில்லை என்றும், பலமுறை விண்ணப்பம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்த சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க சொல்வதாக அவர் உறுதி அளித்தார்.