< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"விஜய் பற்றி அவரிடமே கேளுங்கள்.." - எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி
|5 March 2023 11:57 AM IST
நடிகர் விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள் என இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
நடிகர் விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள் என இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய் அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, விஜய் குறித்த கேள்வியை அவரிடமே கேளுங்கள் என எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலளித்தார். அவரது பதில் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.