< Back
மாநில செய்திகள்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டுஇருளர் இன மக்கள் கலெக்டரிடம் மனு
அரியலூர்
மாநில செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டுஇருளர் இன மக்கள் கலெக்டரிடம் மனு

தினத்தந்தி
|
6 March 2023 11:47 PM IST

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு இருளர் இன மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். இதில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் கிராமத்தில் பள்ளிவிடை இருளர் தெருவை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில்,

எங்கள் தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த இருளர் இனமக்கள் அப்போது ஒரு நசையன் என்ற இருளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம், குமாரமங்கலம், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை, திருபணத்தாள், அரியலூர் மாவட்டத்தில் கரடிகுளம், முதுகுளம், ஆண்டிமடம், பொன்மேடு, இளையபெருமாள் நல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடத்திற்கு குடியேறினர். இந்நிலையில் அவர்கள் குடியேறிய இடம் ஏரி, குளம் புறம்போக்கு என்பதால் அவர்களை தற்போது அரசு அதனை காலிசெய்ய கூறுகிறது. எனவே தங்களுக்கு பூர்வீக இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி இலவச வீட்டுமனை மற்றும் வீடு கட்டி தரவேண்டும் என கூறியுள்ளனர். இதேபோல் ஏராளமான மக்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று மாசி மகம் என்பதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் குறைவாகவே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
மேலும் செய்திகள்