< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் ஆஷா மால்வியா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
|29 Jan 2023 10:46 PM IST
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா மால்வியா நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை,
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மலையேறும் வீராங்கனையான ஆஷா மால்வியா, நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம், முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த சைக்கிள் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
கடந்த நவம்பர் 1-ந்தேதி போபாலில் தனது பயணத்தை தொடங்கிய ஆஷா மால்வியா, மத்திய பிரததேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து 7-வது மாநிலமாக தமிழ்நாட்டில் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஆஷா மால்வியா தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது காந்தி தொடர்பான புத்தகத்தை ஆஷா மால்வியாவிற்கு முதல்-அமைச்சர் பரிசளித்தார்.