< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
வீட்டில் பணம், நகைகள் இல்லாததால் துணிமணிகளை வெளியே வீசி சென்ற கொள்ளையர்கள்
|30 April 2023 12:47 AM IST
வீட்டில் பணம், நகைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் துணிமணிகளை வெளியே வீசி சென்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குளம் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 33). இவரது மனைவி தீபா. செல்வராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது மனைவி தீபா தனது தாயார் ஊரான கிளிபயப்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் பணம், நகைகள் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் பீரோ மற்றும் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த துணிமணிகளை அள்ளிச் சென்று காட்டுப் பகுதியில் வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீபா செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.