< Back
மாநில செய்திகள்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால்மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்தது
தேனி
மாநில செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால்மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்தது

தினத்தந்தி
|
26 July 2023 12:15 AM IST

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்தது.

கோம்பைத்தொழு அருகே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேகமலை வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்