ராணிப்பேட்டை
மனைவி ரூ.10 லட்சம் வரதட்சணை தராததால் 2-வது திருமணம் செய்தவர் கைது
|மனைவி ரூ.10 லட்சம் வரதட்சணை தராததால் 2-வது திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மனைவி ரூ.10 லட்சம் வரதட்சணை தராததால் 2-வது திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கலவை தாலுகா அல்லாளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 30) மருந்து பொருட்கள் விற்பனையாளராக உள்ளார். இவரது மனைவி தமிழரசி (24). இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளாள். தமிழரசியிடம் லோகநாதன் சொந்தமாக மருந்தகம் வைக்க ரூ.10 லட்சம் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என கேட்டு கொடுமைபடுத்தியுள்ளார்.
தமிழரசி பணம் தராததால் ஆத்திரத்தில் லோகநாதன், இரண்டாவதாக பிரியா என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழரசி நேற்று ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின், சப்- இன்ஸ்பெக்டர் சீதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லோகநாதன் (30) மற்றும் லோகநாதனின் மாமா குமார் (50) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.