< Back
மாநில செய்திகள்
வாஷிங்மிஷின் எரிந்து கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு..!
மாநில செய்திகள்

வாஷிங்மிஷின் எரிந்து கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு..!

தினத்தந்தி
|
27 May 2022 3:35 PM IST

அருப்புக்கோட்டை அருகே வாஷிங்மிஷினில் துணியை போட்டு விட்டு அணைக்காமல் சென்ற நிலையில் மீண்டும் கரெண்ட் வந்ததால் முழுவதும் எரிந்து நாசமானது.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் வீட்டில் கரும்புகை வருவதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது வாஷிங்மிஷின் முழுவதும் எரிந்த நிலையில் கரும்புகை வெளியேறியது தெரியவந்தது.

விசாரணையில் வாஷிங்மிஷினில் துணியை போட்டு விட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வாஷிங்மிஷினை நிறுத்தாமல் சென்றுள்ளனர். மீண்டும் மின்சாரம் வந்த போது வாஷிங்மிஷின் தானாக இயங்கியுள்ளது. நீண்ட நேரம் வாஷிங்மிஷின் தொடர்ந்து இயங்கியதால் வாஷிங் மெஷின் முழுவதும் புகைந்து புகை வெளியேறிள்ளது. எனினும் வாஷிங்மிஷினில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வந்ததால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

மின்சாதனங்களை இயக்கும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உடனடியாக இணைப்பை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இதுபோன்று மின் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்