< Back
மாநில செய்திகள்
வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால்   விஷம் குடித்து விவசாயி தற்கொலை
ஈரோடு
மாநில செய்திகள்

வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
3 Nov 2022 1:58 AM IST

விவசாயி தற்கொலை

அம்மாபேட்டை அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூனாச்சியை அடுத்த அட்டவணைப்புதூர் பெத்தக்காபாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 38). விவசாயி. இவருக்கு நிசாந்தி (33) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விவசாயத்திற்காக சவுந்தர்ராஜன் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

சாவு

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி நிஷாந்தி அருகில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த சவுந்தர்ராஜன், விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்டதும் அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சவுந்தர்ராஜன் இறந்தார்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்