தஞ்சாவூர்
கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
|கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
ஒரத்தநாடு
ஒரத்தநாடு தாசில்தார் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை கான்கீரிட் பெயர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகம் வழக்கம் போல் நேற்று காலை பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் கூடியிருந்தனர். அலுவலர்களும் பணியில் இருந்தனர். அப்போது திடீரென அலுவலகத்தின் மேற்கூரை கான்கீரிட் பெயர்ந்து கீழே விழுந்தது.
பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் தற்போது சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.