< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
சிறந்த போலீஸ் நிலையமாக கோவில்பட்டி மேற்கு தேர்வு செய்யப்பட்டது
|29 Jun 2023 12:15 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக கோவில்பட்டி மேற்கு தேர்வு செய்யப்பட்டது
தமிழ்நாடு அரசு மாவட்ட, மாநகர அளவிலான சிறந்த போலீஸ் நிலையங்களை தேர்வு செய்து "தமிழ்நாடு முதலமைச்சர் விருது" வழங்கி உள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக, கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விருதை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வைத்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் ஆகியோரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.