< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'தமிழ்நாடு இருக்கும்வரை சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவு கூரப்படுவார்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|13 Oct 2023 7:10 PM IST
'தமிழ்நாடு இருக்கும்வரை சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவு கூரப்படுவார்' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது,
வீரத்தியாகியின் நினைவு, நமக்கு உள்ளத் தூய்மையை, உறுதியை, தியாக சுபாவத்தை தருவதாக அமைதல் வேண்டும்.
'தியாகிக்கு தலைவணங்குவோம். தாயகத்துக்கு பணிபுரிவோம்' என்றார் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாடு என்ற இம்மாநிலம் உள்ள வரை சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவுகூரப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.