< Back
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் தமிழகத்தில் செல்வாக்கை இழக்கும் - டிடிவி தினகரன்
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் தமிழகத்தில் செல்வாக்கை இழக்கும் - டிடிவி தினகரன்

தினத்தந்தி
|
9 Feb 2023 5:58 AM GMT

எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் தமிழகத்தில் செல்வாக்கை இழக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாள் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இரட்டை இலை சின்னத்திற்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் தமிழகத்தில் செல்வாக்கை இழக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்காக இருந்தது. தற்போது அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது

சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான் தேர்தலில் போட்டியிடவில்லை. குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் நீதிமன்றம் செல்லவில்லை. தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் எங்களை நிர்பந்திக்கவில்லை.

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே ஈபிஎஸ் தரப்பு பெற முடியும். அவர்களால் வெற்றி பெற முடியாது. அதிமுக தற்போது பிராந்திய கட்சியாக மாறி உள்ளது. தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து 12-ந் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்