குஜராத் தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் பக்தி வேஷம் போடுகிறார் - கி.வீரமணி
|குஜராத் தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் பக்தி வேஷம் போடுகிறார் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நம் நாட்டில் பொருளாதார நிலையை மேம்படுத்த லட்சுமி, விநாயகர் படங்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகளை அச்சிடவேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அவருக்கு ஏன் இப்படி ஒரு திடீர் பக்தி வேஷம் என்றால், அது தேர்தல் வித்தைதான்.
இந்துத்துவா வாக்கு வங்கியை வசீகரித்து இழுப்பதற்கு பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.சை விட ஒருபடி மேலே போய் குஜராத் தேர்தலையே குறியாக வைத்து இப்படி ஒரு துருப்புச் சீட்டை இறக்கி இருக்கிறார் போலும்.
முதலில் ஊழல் ஒழிப்பு என்று வேஷம் கட்டி இறங்கினார், இப்போது அவரது பக்தி வேஷம் - தேர்தல் வெற்றிக்கான உத்தியோ உத்தி. அறிவியல் மனப்பாங்குக்குத் தடையா?. இப்படிப்பட்டவர்கள் எதில் போட்டியிடுகிறார்கள் பாருங்கள், இளைஞர்களே, புரிந்துகொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.