< Back
மாநில செய்திகள்
ஆறுமுகநேரியில்தனியார் பால்பண்ணையில் தீவிபத்து
தூத்துக்குடி
மாநில செய்திகள்

ஆறுமுகநேரியில்தனியார் பால்பண்ணையில் தீவிபத்து

தினத்தந்தி
|
12 Aug 2023 12:15 AM IST

ஆறுமுகநேரியில் தனியார் பால்பண்ணையில் தீவிபத்து ஏற்பட்டது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான பால்பண்ணை அடைக்கலாபுரம் சாலையில் உள்ளது. இந்த பண்ணையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வைக்கோல் கட்டுகளில் நேற்று அதிகாலை 1 மணிக்கு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் 500 வைக்கோல் கட்டுகள் மற்றும் குடிசை செட் தீயில் எரிந்து நாசமானது. இதே பால்பண்ணையில் கடந்த 2-ந் தேதி வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத் தக்கது. இத்தீவிபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்