தூத்துக்குடி
காயல்பட்டினம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளியில்170 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்
|காயல்பட்டினம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளியில் 170 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
பேயன்விளையில் அமைந்துள்ள காயல்பட்டினம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி குழு தலைவர் எஸ்.எம். முகமது அப்துல் காதர் தலைமை தாங்கினார். பள்ளி கல்வி குழு பொருளாளர் வி.கே.எம். பாஸ்கரன், துணைத் தலைவர்கள் பெ. கணேசன், பஷீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் அ.கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு 170 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ச.கண்ணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கல்வி குழு உறுப்பினர்கள் ஜி.ராமசாமி, இ. அமிர்தராஜ், சண்முக கனியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியை நியூலீன் நன்றி கூறினார்.