< Back
மாநில செய்திகள்
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அருள் ஞான தீபம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அருள் ஞான தீபம்

தினத்தந்தி
|
4 Jun 2023 3:34 PM IST

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அருள் ஞான தீபத்தை பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வைகாசி பவுர்ணமியான நேற்று உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் பெறவும், மக்கள் ஆன்மிகத்தில் ஞானம் பெறவும், தான தர்மங்கள் சிறக்கவும் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி அம்மன் கருவறையில் அருள் ஞான தீபத்தை ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து அருள் ஞான தீபத்தை ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி நர்சிங் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில்குமார் ஆகியோர் கையில் ஏந்தியபடி கருவறை, சப்த கன்னியர் சன்னதி, நாக பீடம், அதர்வண பத்ரகாளி சன்னதி போன்றவற்றை வலம் வந்து ஓம் மேடைக்கு முன்பாக அம்மன் உருவத்தில் அலங்கரிக்கப்பட்ட விளக்கில் அருள் ஞான தீபத்தை பொருத்தி வைத்தனர். பின்னர் அந்த அருள் ஞான தீபத்திற்கு தீபாராதனை செய்து, திருஷ்டி கழிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பவுர்ணமியையொட்டி அருள் ஞான தீபத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த எண்கோண சக்கரத்தில் 306 விளக்குகள் அமைக்கப்பட்டு அதன் மையத்தில் இருந்த பிரதான விளக்கைஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார். 1008 போற்றி மந்திரங்கள் படிக்கப்பட்டு பவுர்ணமி விளக்கு பூஜை நடைபெற்றது.இந்த அருள் ஞான தீபமானது மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஏற்றப்பட உள்ளது. இதில் செவ்வாடை பக்தர்களும், பொதுமக்களும் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி ஆதிபராசக்தி அம்மனை வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விழா ஏற்பாடுகளை மராட்டிய மாநில மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பொறுப்பாளர்களும், பக்தர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்