ராமநாதபுரம்
ராமேசுவரம் கோவிலில் ஆருத்ரா திருவிழா
|ராமேசுவரம் கோவிலில் ஆருத்ரா திருவிழா
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா திருவிழா கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டின் திருவாதிரை ஆருத்ரா திருவிழா நேற்று முன்தினம் இரவு நடராஜருக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆருத்ரா திருவிழாவில் இரண்டாவது நாளான நேற்று ருத்ராட்ச மண்டபத்தில் வீற்றிருந்த நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. அதுபோல் மாணிக்கவாசகர் தங்க கேடயத்தில் வைத்து மூன்றாம் பிரகாரத்தை சுற்றி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆருத்ரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு பால், பன்னீர், திரவியம், மஞ்சப்பொடி, இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து நடராஜருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை பூஜைகள் நடைபெற்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.