< Back
மாநில செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் - காவல்துறை பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் - காவல்துறை பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
24 Dec 2023 6:26 AM IST

பக்தர்கள் இடையூறு இல்லாமல் தரிசனம் செய்ய பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 25-ந்தேதி(நாளை) முதல் 28-ந்தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பூஜை, வழிபாடு ஆகியவற்றில் எந்தவித இடையூறும் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்ய பாதுகாப்பு வழங்கக் கோரி பொது தீட்சிதர்கள் குழு சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பிறப்பிக்கப்பட்ட அரசாணையை செயல்படுத்த தடை கோரி ஐகோர்ட்டில், தீட்சிதர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, ஆருத்ரா உற்சவத்தின்போது எவ்வித இடையூறும் இல்லாமல் பக்தர்கள் வழிபட பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்