< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி

தினத்தந்தி
|
27 April 2023 12:15 AM IST

பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி

சாயல்குடி

சாயல்குடி தொன்போஸ்கோ ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பள்ளியில் வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கம் சார்பில் 148-வது திருவள்ளுவர் சிலை அர்ப்பணிப்பு மற்றும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு மைதானம் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். முன்னாள் சாயல்குடி பேரூராட்சி தலைவர் முகம்மது ஜின்னா, சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம், திருச்சி காவேரி மேம்பாட்டு மையம் இயக்குனர் அமலோற் பவராஜ், திருச்சி சலேசிய மாநில பொருளாளர் அமல தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளுவர் சிலையை வி.ஜி.பி. டாக்டர் சந்தோஷம் திறந்து வைத்தார். திருச்சி சலேசிய மாநில தலைவர் அருள் தந்தை அகிலன் மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் செய்திகள்