< Back
மாநில செய்திகள்
வேளாண் கிராமிய கலை நிகழ்ச்சி.
சிவகங்கை
மாநில செய்திகள்

வேளாண் கிராமிய கலை நிகழ்ச்சி.

தினத்தந்தி
|
12 Feb 2023 12:15 AM IST

வேளாண் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே மின்னமலைப்பட்டி கிராமத்தில் வேளாண் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு உழவர் பயிற்சி நிலைய துணை வேளாண்மை இயக்குனர் கதிரேசன், வேளாண்மை உதவி இயக்குனர் அம்சவேணி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கலைஞர்கள் கலை நிகழ்ச்சி மூலமாக வேளாண் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினர். துணை வேளாண்மை அலுவலர் பாலமுருகன், உதவி வேளாண்மை அலுவலர் கார்த்திக் ராஜா, உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீரங்கசெல்வி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்