< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
|3 Dec 2022 12:15 AM IST
எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனையில் நம்பிக்கை மையம் சார்பாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் அய்யன்ராஜ் ஆலோசனையின்ே்பரில் எய்ட்ஸ் குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நாடகம் மற்றும் கரகாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் கலை குழு சார்பில் நடைபெற்றது. அ.காளாப்பூர் வடக்கு வாசல் அம்மன் கோவில் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சுந்தரம்மாள் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
மணப்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் மணிமாலா, ஆய்வக நுட்புணர்வு சுதா ஆகியோருடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.