< Back
மாநில செய்திகள்
எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

தினத்தந்தி
|
28 Nov 2022 12:15 AM IST

எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

இளையான்குடி

இளையான்குடி அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சார்பாக எய்ட்ஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாடகம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் கீழாயூர் காலனி மற்றும் கண்ணமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. கீழாயூர் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 11-வது வார்டு கவுன்சிலர் ராஜவேலு முன்னிலை வகித்தார். மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு மற்றும் இளையான்குடி அரசு மருத்துவமனை சார்பாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நாடகம் நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கண்ணமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா ரங்கநாதன் முன்னிலை வகித்தார். கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் மற்றும் இளையான்குடி அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்