தஞ்சாவூர்
பட்டுக்கோட்டையில், கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி
|பட்டுக்கோட்டையில், கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நடந்தது.
பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞர் கல்யாண சுந்தரம் 94- வது பிறந்தநாளையொட்டி கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு விடிய விடிய நடந்தது. பட்டுக்கோட்டை காசாங்குளம் வடகரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியையொட்டி கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாலையில் பஸ் நிலையத்தில் இருந்து கலை இலக்கியப் பேரணியை செந்தில்குமார் தலைமையில் மாவட்ட தலைவர் ஜீவபாரதி தொடங்கி வைத்தார். சங்க கிளைத் தலைவர் முருகசரவணன் தலைமையில் விழா தொடங்கியது. கிளைச் செயலாளர் மோரிஸ் அண்ணாதுரை வரவேற்றார். மாவட்ட செயலாளர் விஜயகுமார் கலை இரவை தொடங்கி வைத்தார். இதில் பறையாட்டம், கரகம், ஒயிலாட்டம், மான் கொம்பாட்டம், குச்சியாட்டம், சிலம்பாட்ட உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன், திரைப்பட இயக்குனர் சந்தானமூர்த்தி, எழுத்தாளர் வன்மி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.