< Back
மாநில செய்திகள்
கலைஞர் கனவு இல்லம் திட்டம் - அடுத்த மாதம் தொடக்கம்
மாநில செய்திகள்

கலைஞர் கனவு இல்லம் திட்டம் - அடுத்த மாதம் தொடக்கம்

தினத்தந்தி
|
18 Jun 2024 6:21 PM IST

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த 2024-25ம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியலை வரும் 30ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். தொடர்ந்து ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்