< Back
மாநில செய்திகள்
கலைஞா் மகளிர் உரிமை திட்டம் நாளை தொடக்கம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கலைஞா் மகளிர் உரிமை திட்டம் நாளை தொடக்கம்

தினத்தந்தி
|
14 Sept 2023 12:49 AM IST

மாதம் ரூ.1,000 வழங்கப்படவுள்ள கலைஞா் மகளிர் உரிமை திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்க உள்ளார். அன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் வைத்து தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகள் கலந்து கொள்ளும் வகையில் விழா நடத்தப்படவுள்ளது. மேலும் தமிழக முதல்-அமைச்சர் எழுதிய அழைப்பு கடிதங்கள் ஒவ்வொரு குடும்ப தலைவியின் வீட்டிற்கும் சென்று சேரும் வகையில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படவுள்ள பணம் எடுக்கும் அட்டைகளை பெயர் வாரியாக பிரித்தெடுக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்