< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை': முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை
|4 Aug 2023 8:04 AM IST
'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முதல்கட்டமாக இதுவரை 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று நடைபெற்ற முகாமில் 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இரண்டாம் கட்ட முகாம்கள் நாளை முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் இன்று வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.