< Back
மாநில செய்திகள்
தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு
மாநில செய்திகள்

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு

தினத்தந்தி
|
17 Nov 2023 12:09 PM IST

விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

சென்னை,

தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். நிர்வாகிகளின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், நிச்சயம் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

அத்துடன், நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் பங்கேற்க உள்ளனர். விழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்