< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையின் பெருமை" - சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்
|15 July 2023 12:17 AM IST
கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையின் பெருமை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது;
மதுரையின் மாபெருங்கனவொன்று நிறைவேறுகிறது. மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்களால் திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரைக்கான பெருங்கொடை.
அறிவே அற்றங்காக்கும் கருவி. அறிவின் வாசலை அனைவருக்குமாக்கவே நூலகங்கள் உருவாகின.கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையின் பெருமை. இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.