அரியலூர்
கலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகள்
|கலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகள் அரியலூரில் நடைபெற்றது.
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தலை நிமிர்ந்த தமிழகம் உள்பட பல்வேறு தலைப்புகளில் அரியலூரில் உள்ள 50 பள்ளி மற்றும் 10 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை, ஓவியம், வினாடி-வினா, குறும்பட போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 890 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் இதுபோன்ற போட்டிகளில் பங்குபெற்று தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.