< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
கலைஞர் நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம்
|22 Oct 2023 12:07 AM IST
கலைஞர் நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாநில அளவில் நடைபெற உள்ள தொலைநோக்கு சிந்தனையாளர் - கலைஞர் என்ற சிறப்பு குழுவில் கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற 4-ந்தேதி அட்லஸ் கலையரங்கில் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கினார். அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கிய பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை சிறந்த முறையில் வழங்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.