கன்னியாகுமரி
நாகர்கோவிலில் 9-வது நாளாக நடந்த புத்தக திருவிழாவில் கலை நிகழ்ச்சி
|நாகர்கோவிலில் 9-வது நாளாக நடந்த புத்தக திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா நாகா்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து 9-வது நாள் திருவிழா நேற்று நடந்தது. விழாவில் கலைமாமணி நர்த்தகி நடராஜ் கலை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நாவல் ஆசிரியை மலர்வதி, ஆனந்த், ஜேம்ஸ் ஆர்.டேனியல், குமரி ஆதவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். மேலும் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி (தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு) ரேவதி பேசினார். இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியன், ஜீலியன் ஹீவர், தாசில்தார்கள் ஜெகதா, முத்துலெட்சுமி, ராஜேஷ், குமாரவேல், தனிதாசில்தார் கோலப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.