< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள்
|23 Oct 2023 2:25 AM IST
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இதில் 45 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மொழித்திறன், நுண்கலை, கவின் கலை போட்டிகள், இசை மற்றும் இசைச்சங்கமம், தாள வாத்தியம், பறை, தோல் கருவிகள், நடனம், நாடகம் உள்பட 200 வகையான போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் சாந்தப்பன், சம்மனசு மேரி உள்ளிட்டோர் பேசினார்கள். இதில் பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.