< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
திருமயம் அரசு பள்ளியில் கலை திருவிழா
|18 Oct 2023 11:40 PM IST
திருமயம் அரசு பள்ளியில் கலை திருவிழா நடைபெற்றது.
திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயமணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதில் திருமயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் 20 அரசு பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள் நடனம், பாட்டு, மாறுவேடம், விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், கலைத் திருவிழா வட்டாரக்குழுவினர் செய்திருந்தனர். இங்கு நடைபெறும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டியில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்படுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.